ரஜினியை விமர்சிக்கும் திருமாவளவன்- வீடியோ

  • 6 years ago
ரஜினிகாந்தின் அறிவிப்புகளும், பேச்சுக்களும் அனைவரையும் கவரவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். ரஜினிகாந்த் குறிப்பிட்ட மதத்திற்காக மட்டுமே பேசுகிறார், அவர் மதவாத அரசியலின் முகமாக இருக்கிறார் என்றும் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதியை நேற்று கோபாலபுரம் இல்லத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்தித்து அவரது உடல்நலன் குறித்து விசாரித்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார்.

கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தேன். அவர் நலமுடன் இருக்கிறார். எங்களை நன்றாக அடையாளம் கண்டார், என் பெயரை உச்சரித்தார். அந்த அளவுக்கு உடல் நலம் தேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கருணாநிதி தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு காலம் மைய நோக்கு விசையாக விளங்கியவர்.

கருணாநிதியை சுற்றியே தமிழக அரசியல் 1969 லிருந்து இயங்கி வந்தது. இன்று முதுமை காரணமாக உடல் நலிவுற்ற நிலையிலும் அவர் அரசியலை உற்று கவனிக்கிறார், அரசியல் தலைவர்களை அடையாளம் காண்கிறார், வாழ்த்து தெரிவிக்கிறார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

Recommended