பேருந்து நிறுத்தம் எதிரொலி ரயிலில் மக்கள் பயணம்- வீடியோ

  • 6 years ago

போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தில் ஈடுபவடுதாக தெரிவித்துள்ளதால் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தற்காலிக பணியாளர்களை கொண்டு பேருந்துகளை இயக்க அரசு முடிவெடுத்துள்ளது.

ஊதிய உயர்வு நிலுவை தொகைகளை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பெரும்பாலான அரசு பேருந்துகள் இயக்கப்பட வில்லை. இதனால் பொதுமக்களும் பயணிகளும் அவதியடைந்தனர். தினக்கூலி அடிப்படையில் பேருந்துகளை இயக்க தற்காலிக பணியாளர்களாக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் தேவை என்று அரசு அறிவித்துள்ளது. தற்காலிக பணியாளர்களை கொண்டு பேருந்து இயக்கப்படுவதற்கு தெழிற்சங்கத்தினரும் அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் சென்னை நகரில் மாநக பேருந்துகள் குறைவாகவே இயக்கப்பட்டது. இதனால் ஐடி நிறுவனங்கள் மற்றும் தனியார் பேருந்துகளை இயக்கி பொதுமக்களின் குறைகளை அரசு சமாளித்து வருகிறது. ஆனாலும் மாநகர பேருந்திற்கு ஈடாக தனியார் பேருந்துகள் இயக்கப்பட வில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பேருந்து இயக்கப்படாததால் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் மக்கள் பயணம் செய்தனர். வெளியூர் செல்லும் பயணிகள் ரயில்களில் பயணம் செய்ததால் சென்ட்ரல் எழும்பூர் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. சென்னை நகரில் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்பட்டதால் ஆட்டோ கால்டாக்சிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Des : The government has decided to run buses with temporary staff in all parts of Tamil Nadu, including Chennai, as the transport workers are in the process until their demands are met.

Recommended