ஜெய் பற்றி விஷாலிடம் புகார் செய்த தயாரிப்பாளர்கள் !!- வீடியோ

  • 6 years ago
பலூன் திரைப்பட நஷ்டம் தொடர்பாக ஜெய் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் உள்ளிட்டோர் நடித்த பலூன் படம் அண்மையில் வெளியானது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் கே. நந்தகுமார், டி.என். அருண் பாலாஜி சார்பில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,

எங்களது பலூன் திரைப்படம் கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதி படப்பிடிப்பு துவங்கி டிசம்பர் 29, 2017 வெளியாகி தற்போது திரையரங்கில் ஓடிக் கொண்டு இருக்கிறது. இப்படத்தை நாங்கள் 2017ம் ஆண்டு ஜனவரி மாதமே வெளியிட திட்டமிட்டோம். ஆனால் அது முடியாமல் 9 மாதங்கள் கழித்து டிசம்பரில் வெியாக முக்கியமான காரணம் நடிகர் ஜெய்.

2016ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய பலூன் திரைப்படம் 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிரு்த நிலையில் ஜெய் படத்திற்காக தேதிகளை சரிவர கொடுக்காமலும், படப்பிடிப்பிற்கு வராமலும், சரியாக எங்களுக்கு ஒத்துழைக்காமலும் இருந்ததால், படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பருக்கு தள்ளிப்போனது. பின்னர் செப்டம்பர் ரிலீஸ் வேளையில் இருந்தபோது, 'டப்பிங்'க்கு கூட அவர் வராமல் எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதால், எங்களால் படப்பிடிப்பை தொடர முடியாமல் பல லட்சம் வரை நஷ்டம் ஆனது.

படப்பிடிப்பின் போது, தினமும் குடித்துவிட்டு தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வருவார். வந்ததும் எப்போ பேக்கப் ஆகும், எப்போ மீண்டும் ஹோட்டல் ரூம் சென்று குடிக்கலாம் என்ற எண்ணத்திலேயே இருந்து, நடிப்பில் சரியாக கவனம் செலுத்தாமல், ஒரு வகையான மெத்தனப்போக்குடன் நடந்து கொள்வார். ஒவ்வொரு முறையும் கேரவனில் இருந்து வெளியே வர ஒரு மணி நேரத்திற்கும் மேலாகும். 8 மணிநேரம் ஷூட்டிங் செய்ய திட்டமிட்டால், இவரை வைத்து 4 மணிநேரம் ஷூட்டிங் செய்வதே பெரிய போராட்டமாய் சென்று முடியும். அவர் வசதிக்கு எவ்வித குறைகளும் இல்லாமல் பார்த்துக் கொண்ட எங்களுக்கு அவர் மிகுந்த மன உளைச்சலையும், பொருள் நஷ்டத்தையும் மட்டுமே ஏற்படுத்தினார்.


Balloon producers have given a complaint against actor Jai for his attrocious behaviour during the making of the film that caused loss. Jai is accused of coming to the shootingspot drunk.

Recommended