மு.க.ஸ்டாலினையும், தினகரனையும் ஒன்றிணைத்த ரஜினி- வீடியோ

  • 6 years ago
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினையும், சுயேச்சை எம்எல்ஏ டிடிவி தினகரனையும் ஒரு விஷயத்தில் ஓரணியில் நிற்க வைத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அரசியலுக்கு வந்துவிட்டதாகவும், தனிக்கட்சி துவங்கி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாகவும் ரஜினிகாந்த் டிசம்பர் 31ம் தேதி அறிவித்து நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், ஆன்மீக அரசியலை மேற்கொள்ளப்போவதாக அவர் அறிவித்ததுதான் சர்ச்சைகளுக்கு காரணமானது.

ஆன்மீக அரசியல் என்ற வார்த்தை பாஜகவை நினைவுபடுத்துவது போல இருப்பது, பாஜகவுடன் ரஜினிக்கு உள்ள நட்பு, மோடி திட்டங்களுக்கு முந்தியடித்து ரஜினி டிவிட்டரில் வாழ்த்து கூறியது என பல்வேறு விஷயங்களை முன்வைத்து, ரஜினிக்கு திராவிட சித்தாந்தங்கள் பேசுவோரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாஜகவுக்கு எதிராக தமிழகத்தில் உள்ள எதிர்ப்பு அலையில் சரிபாதி இப்போது ரஜினிக்கு எதிராகவும் திரும்பிவிட்டது.

அதேநேரம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தமிழகத்தின் சிறு அரசியல் கட்சிகள் வீரியத்தோடு ரஜினியின் ஆன்மீக அரசியல் பேச்சை கண்டிக்கவில்லை. ரவிக்குமார் சாடினாலும், கட்சியின் தலைமை பொறுப்பில் உள்ள திருமாவளவன் வலிக்காத அளவுக்கான விமர்சனங்களைதான் முன்வைத்துள்ளார். மேலும் ஆன்மீக அரசியல் என்றால் என்ன என்பதை ரஜினிகாந்த் விளக்கியபிறகுதான் தவறாக இருந்தால் விமர்சனம் செய்ய முடியும் என்பதே அவரது வாதம்.

DMK leader MK Stalin and Independent MLA TTV Dinakaran stand in the same direction against actor Rajinikanth. It is obvious that Stalin and Dinakaran have come down heavily on Rajini for securing Dravidian ideology people support

Recommended