ஆர்.கே.தேர்தல் தோல்வி : திமுகவில் களையெடுப்பு தொடங்கியது- வீடியோ

  • 6 years ago
ஆர்.கே.நகர் தேர்தலில் டெபாசிட்டைப் பறிகொடுத்த கொதிப்பில் இருக்கிறது தி.மு.க தலைமை. ' வட்டத்தைக் கலைத்து நிர்வாகிகளை கூண்டோடு நீக்கியது முதல்கட்டம்தான். இதற்குக் காரணமான மாவட்ட செயலாளர்கள் களையெடுக்கப்பட உள்ளனர்" என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள். தினகரனின் வெற்றியும் அதைத் தொடர்ந்து அ.தி.மு.கவுக்குள் நடக்கும் கலவர சூழல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின். தேர்தல் தோல்வி அளித்த பாதிப்புகள் ஒருபுறம் இருந்தாலும், அதனை மு.க.அழகிரி விமர்சித்த விதம் நிர்வாகிகளை கொதிப்பில் ஆழ்த்திவிட்டது. ஆனால், அழகிரியின் கேள்விகளுக்கு பதில் சொல்வதையே ஸ்டாலின் விரும்பவில்லை.

இந்த செயல் தலைவர் இருக்கும் வரையில் இப்படித்தான் இருக்கும்' என அழகிரி கொதிப்பைக் காட்ட, ' கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு நாம் பதில் சொல்ல வேண்டியதில்லை' என ஆதரவாளர்களிடம் பேசியிருக்கிறார் ஸ்டாலின். இதையடுத்து, தோல்விக்கான காரணங்களை ஆராய தி.மு.க கொறடா சக்ரபாணி, வழக்கறிஞர்கள் கண்ணதாசன், கிரி ராஜன் ஆகியோர் தலைமையில் குழு அமைத்தார் ஸ்டாலின்.

The DMK leadership is in angry after losing the deposit in the RK Nagar election. Stalin followed closely the circumstances surrounding in AIDMK.