பிரபல ஊடகம் மீது புகார் நடவடிக்கை எடுக்கும் பாடகர் ஸ்ரீநிவாஸ் !!- வீடியோ

  • 6 years ago
தன் பெயரை கெடுத்த மீடியா மீது வழக்கு தொடரப் போவதாக பாடகர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த தெலுங்கு பாடகர் ஸ்ரீனிவாஸ் பெண் ஆர்.ஜே.வுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த செய்தியை வெளியிட்ட பிரபல ஊடகம் ஒன்று தமிழ் பாடகர் ஸ்ரீனிவாஸின் புகைப்படத்தை தவறுதலாக வெளியிட்டுள்ளது.

இதை பார்த்த ஸ்ரீனிவாஸ் கோபம் அடைந்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ் இறந்தபோது சில மீடியாக்கள் என் பயோடேட்டாவுடன் இரங்கல் செய்தி வெளியிட்டன. தற்போது ஹைதராபாத்தில் யாரோ ஒரு பாடகர் ஸ்ரீனிவாஸ் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதற்கு என் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். என் பெயரை கெடுத்ததற்கு இந்த முறை அவர்கள் மீது வழக்கு தொடரப் போகிறேன். இது தொடர்பாக சட்ட நிபுணர்கள் யாராவது உதவ முடியுமா? நான் மிகவும் கோபத்தில் உள்ளேன் என்று ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார் ஸ்ரீனிவாஸ்.

@IamSaloniSingh என் பெயர் ஸ்ரீனிவாஸ். நான் சென்னையை சேர்ந்த பாடகர். இதே பெயரில் ஹைதராபாத்தில் ஒரு பாடகர் கைது செய்யப்பட்டதற்கு இந்தியா டைம்ஸ் என் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ட்வீட்டியுள்ளார் ஸ்ரீனிவாஸ்.

Recommended