சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து கடைகள் அடைப்பு- வீடியோ

  • 6 years ago

சிவகாசியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள்

பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் புகையால் சுற்றுசூழலில் காற்று மாசுபாடு ஏற்படுவதாக பட்டாசு வெடிக்கவும் விற்பனை செய்யவும் உச்சநீதிமன்றம் தடைவிதித்தது . இதனால் பட்டாசு நகரமான சிவகாசியில் பட்டாசு விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது . வடமாநிலங்களில் இருந்து பட்டாசு கொள்முதல் செய்வது முற்றிலும் தடை செய்யபட்டுள்ளதால் பட்டாசு தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலார்கள் வறுமையில் வாடி வருகின்றனர் .இதனால் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலார்கள் 9 நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் விதமான சிவகாசி வணிகர்கள் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள் .

Des : Today a day-long struggle was held to stop the ban imposed on firecrackers in Sivakasi

Recommended