சொந்த காசு செலவழித்தாவது கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் டிடிவி தினகரன் வாக்குறுதி- வீடியோ

  • 6 years ago

ஆர்கே நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன் இன்று அப்பகுதி வாக்காளர்லகளை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த ஆர் கே நகர் இடைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின்னர் சபாநாயகரை சந்தித்து எம்எல்ஏ வாகவும் பதவி ஏற்றுக்கொண்டார். அதையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவையும் சந்தித்து ஆசி பெற்றார். இன்று மாலை தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்க சென்றார். திறந்த வேனில் ஒவ்வொரு வீதியாகவும் டிடிவி தினகரன் சென்று வாக்காளர்களை சந்தித்து நன்றியை தெரிவித்தார். அப்போது வாக்காளர்கள் தேர்தல் அறிக்கையில் கூறியவைகளை உடனே செய்து தர வேண்டும் என்று டிடிவி தினகரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு டிடிவி தினரகன் தமிழக அரசு எம்எல்ஏ தொகுதி நிதி வழங்கினாலும் சரி வழங்காவிட்டாலும் சரி தனது கைக்காசை செலவழித்தாவது உங்களிடம் அளித்த கோரிக்கைகளை செய்து தருவேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார்.

Des : ttv Dinakaran, who won and won Independence in Arke Nagar constituency, thanked the voters today.

Recommended