பாலியல் தொடர்பால் மாணவர்களுக்குள் சண்டை- வீடியோ

  • 6 years ago


பள்ளி முடித்து விட்டு வீட்டுக்கு வந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் வெற்றிலை பட்டி பகுதியை சேர்ந்த மோகன் என்பவர் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் லோக்கேஷ் என்பவரும் இணை பிரியா நண்பர்களாக இருந்துள்ளனர். இருவருக்கும் இடையே பாலியல் ரீதியான தொடர்பும் இருந்துள்ளதாக தெரிகிறது. நேற்று பள்ளிக்கு சென்ற இருவரும் மாலை வீடு திரும்பிய பின்னர் சிறிது நேரம் விளையாடிக்கொண்டிருந்துள்ளனர். பின்னர் வீட்டிற்கு சென்ற மோகன் விஷமருந்தி உள்ளார். இது குறித்து லோகேஷ் தனது தாத்தாவிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். விஷமருந்திய மோகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு மாணர்களுக்கு இடையில் பாலியல் ரீதியான தொடர்பு இருந்துள்ளதால் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended