பிரபு தேவாவின் களவாடிய பொழுதுகள் படத்தின் விமர்சனம்- வீடியோ

  • 6 years ago
தங்கர் பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் 'களவாடிய பொழுதுகள்'. கடந்த 2010-ம் ஆண்டே ஷூட்டிங் முடிக்கப்பட்ட இந்தப் படம் பல சிக்கல்களால் மாட்டிக்கொண்டு ஒருவழியாக இப்போதுதான் ரிலீஸ் ஆகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் பல ட்ரெண்டுகள் மாறிவிட்ட இந்தக் காலகட்டத்தில் வெளியாகியிருக்கும் 'களவாடிய பொழுதுகள்' காலம் கடந்தும் ரசிகர்களை ஈர்த்திருக்கிறதா...? வாங்க பார்க்கலாம். ஏழை டாக்ஸி டிரைவரான பிரபுதேவா, சாலையில் போகும்போது ஒரு விபத்தைப் பார்க்கிறார். படுகாயத்தோடு கிடக்கும் பிரகாஷ்ராஜை மற்றவர்களின் உதவியோடு மருத்துவமனையில் சேர்க்கிறார். அடுத்த வேளைச் சோற்றுக்கு வழியில்லாத நிலையில் தன் கையில் இருந்த சொற்ப பணத்தை மருத்துவமனையில் கட்டி விடுகிறார். பிரகாஷ்ராஜின் குடும்பத்தினருக்கும் தகவல் சொல்லி விடுகிறார். பிரகாஷ்ராஜை பார்க்க வரும் அவரது மனைவி பூமிகா, பிரபுதேவாவின் முன்னாள் காதலி. அவரைப் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு அப்படியே கிளம்பி வீட்டுக்கு வந்துவிடுகிறார் பிரபுதேவா.


Read 'Kalavaadiya pozhuthugal' movie review here. Prabhu deva, Bhumikaa and Prakashraj starred 'Kalavaadiya pozhuthugal' directed by Thangar Bachan. 'Kalavaadiya pozhudhugal' is a romantic emotional drama. Read full review here

Recommended