உயிருக்கு போராடியவர்களை காரில் தூக்கி சென்று காப்பாற்றிய ஆட்சி தலைவர்- வீடியோ

  • 6 years ago


இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய தாய், குழந்தையை மாவட்ட ஆட்சி தலைவர் தனது காரில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதித்தால் இரண்டு பேரும் காப்பாற்றப்பட்டனர். மாவட்ட ஆட்சி தலைவரின் இந்த செயல்பாடுகளை அப்பகுதி மக்கள் பெரியதும் பாராட்டினர்.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் பாலமுத்து. இவர் தனது தாய் மற்றும் இரண்டு வயது குழந்தையை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பாலமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாய் காளீவரியும் இரண்டுவயது குழந்தையும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக ஆட்சித்தலைவர் லதா தனது காரில் சென்று கொண்டிருந்துள்ளார். விபத்தை நேரில் பார்த்த லதா அதிர்ச்சியடைந்ததுடன் இரத்தம் சொட்ட சொட்ட உயிருக்கு போராடி கிடந்த இருவரையும் உடனே தனது காரில் ஏற்றிக்கொண்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். தக்க சமயத்தில் மாவட்ட ஆட்சியர் லதா உயிருக்கு போராடியவர்களை மருத்துவமனையில் அனுமதித்தால் இருவரும் காப்பாற்றப்பட்டனர். மாவட்ட ஆட்சியரின் இந்த செயலை கண்டு அப்பகுதி மக்கள் அவரை பாராட்டினர்.