ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரம்... தினகரனின் பதவி பறிபோக வாய்ப்பு ?- வீடியோ

  • 6 years ago
ஆர்.கே.நகர் தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் சுயேச்சை எம்எல்ஏ தினகரன் பதவி பறிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலில், தினகரன் தரப்பினர் வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன்களை கொடுத்ததாகவும், தேர்தல் முடிந்த பிறகு, 20 ரூபாய் டோக்கன்களை திரும்ப பெற்று ரூ.10 ஆயிரம் தரப்படும் என அறிவித்து ஓட்டு வேட்டையாடியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. முதலிலேயே பணம் கொடுத்தால் அதை வாங்கிக்கொண்டு வேறு வேட்பாளருக்கு பமம் கொடுக்க வாய்ப்புள்ளதாக கருதிய தினகரன் தரப்பு இப்படி ஒரு மாஸ்டர் பிளானோடு களமிறங்கியதாக கூறப்படுகிறது.

தினகரன் தரப்பு திட்டத்திற்கு கைமேல் பலன் கிடைத்தது. பணம் கிடைக்கும் என்ற ஆசையில் பலரும் வாக்குகளை குக்கர் சின்னம் தேயத் தேய குத்தி தள்ளியதால் அவர் 50 சதவீதத்திற்கும் அதிக வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றார் என பிற கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
இப்போது டோக்கனுக்கு பதிலாக பணம் தருவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் நன்றி தெரிவிக்க கூட ஆர்.கே.நகர் போகாமல் தினகரன் இழுத்தடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The question of whether the Independent MLA Dinakaran will be disqualified as his supporters in RK Nagar was arrested in connection with a 20-rupee token dispute in the election time.

Recommended