புத்தாண்டு கொண்டாடத்திற்கு கட்டுபாடு விதித்தது காவல்துறை- வீடியோ

  • 6 years ago

புத்தாண்டு கொண்டாடங்கள் இரவு 12 மணிக்கு மேல் நடைபெற கூடாது என்று காவல்துறை ஆணையர் ஏ கே விஸ்வநாத் தெரிவித்துள்ளார்

புத்தாண்டு என்றாலே கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது .புதிய வருடம் பிறப்பதை குதூகலத்துடன் வரவேற்க புதிய இரவு முழுவதும் கலைநிகழ்ச்சிகள் வானவேடிக்கைகள் பார்டி என அனைத்து செயல்களிலும் மக்கள் ஈடுபடுவார்கள்

இன்னும் சில நாளில் புத்தாண்டு வர உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது .புத்தாண்டு கொண்டாட்டங்களில் பல கட்டுபாடுகளை விதித்துள்ளது

இரவு இரவு 12 மணிக்கு மேல் கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடங்கள் நடத்த கூடாது . கடற்கரை சாலையில் வாகனங்களில் வளம் வரகூடாது ..மது அருந்திவிட்டு பொது இடங்களில் சுற்றகூடாது . மிகுந்த ஒலி எழுப்பும் பாடல்களை ஒலி பெருக்கியில் ஒலிக்க செய்யகூடாது உள்ளிட்ட பல கட்டுபாடுகளை விதித்துள்ளது . புத்தாண்டு அன்று சாலைகளில் வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி போக்குவரத்து காவல்துறையினர் அதிக அளவில் பணியில் ஈடுபடுத்த பட்டுவார்கள் என்றும் காவல்துறை ஆணையர் ஏ கே விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.

Des : Police Commissioner AK Vishwanath said that the New Year's celebrations should not be held at 12 noon