ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து வைகோ பேட்டி- வீடியோ

  • 6 years ago

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து வரும் 31ம் தேதி வரை பொருத்திருந்து பார்ப்போம் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை நேற்றுமுதல் சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். நேற்று ரசிகர்களை சந்திப்பிற்கு முன் பேசுகையில் வரும் 31ம் தேதி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்புகள் வெளிவரும் என்று தெரிவித்தார். இது குறித்து மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில் கடந்த 1990ல் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது அவர் தனது அரசியல் பிரவேசம் குறித்து எதுவும் அறிவிக்காமல் அமெரிக்கா சென்று விட்டார். பின்னர் 96 ல் தமகவிற்கு ஆதரவு தெரிவித்தார். அதன் பின்னர் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. நேற்று அரசியலில் வீரம் மட்டும் போதாது விவேகமும் வேண்டும் என்று கூறியுள்யுள்ளதுடன் வரும் 31ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அறிவித்துள்ள தினத்திற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளன அதையும் பொருத்திருந்து பார்ப்போம் என்றார் வைகோ.



Des : MDMK general secretary Vaiko has said that Rajinikanth will have to wait till the 31st day of the entry into politics.