கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் எடியூரப்பா செய்த கூத்து- வீடியோ

  • 6 years ago
கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பாஜக பல வியூகங்களுடன் களமிறங்கியுள்ளது. கர்நாடகாவில் அடுத்த ஆண்டு மே மாதவாக்கில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜ சார்பில் அக்கட்சியின் மாநில தலைவரும் முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா பிரச்சார யாத்திரையை தொடங்கியுள்ளார். இந்த பிரச்சாரத்தில் இந்துத்துவா ஃப்ளேவரை சேர்த்து, காரசாரமாக்க, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் வரவழைக்கப்பட்டுள்ளார்.

யோகி தனக்கு கொடுத்த பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றினார். கர்நாடகாவில் அவர் கையில் எடுத்த ஆயுதம், திப்பு ஜெயந்தி. திப்பு சுல்தான் பிறந்த நாள் கொண்டாட்டத்தை அரசு விழாவாக கர்நாடக காங்கிரஸ் அரசு நடத்தி வருவதற்கு, பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனவே ஹூப்ளியில் எடியூரப்பாவுடன் இணைந்து, யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்தபோது, திப்பு ஜெயந்தி விவகாரத்தை கையில் எடுத்தார்.

பாஜக. கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. காங்கிரசுக்கு நீங்கள் நிரூபித்துக் காட்ட வேண்டிய ஒருவேலை உள்ளது. இந்தியா ஹனுமாரை வணங்குமே தவிர திப்பு சுல்தானை கிடையாது என்பதை கர்நாடக மக்கள் எடுத்துக் காட்ட வேண்டும். இவ்வாறு யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்தார்.

The Mahadayi water sharing row and Yogi Adityanath became the highlights of BJP's Parivartana Yatra in Hubballi on Wednesday. With the Lingayat religious tag issue eating into the BJP's vote bank, B S Yeddyurappa turned the Kalasa-Banduri water sharing row into a poll agenda. Uttar Pradesh Chief Minister Yogi Adityanath propelled the Hindutva card with scathing attacks on the Congress.

Recommended