விராத்-அனுஷ்கா திருமண வரவேற்பு வீடியோ

  • 6 years ago
தெரியாமல் அவசர அவசரமாக கடந்த வாரம் விராட் கோஹ்லி - அனுஷ்காஷர்மாவின் திருமணம் நடந்தது முடிந்தது. இத்தாலியில் நடைப்பெற்ற அந்த நிகழ்ச்சியில்மிகவும் நெருங்கிய உறவினர்கள்... கிட்டத்தட்ட ஐம்பது பேருக்கும் குறைவானோர் கலந்து கொண்டனர். மஞ்சள் பூசும் நிகழ்ச்சி,மெஹந்தி,பேச்சுலர் பார்ட்டி,நிச்சயதார்த்தம்,திருமணம் என வெகுவிமர்சையாக நடந்து முடிந்து அதன் படங்கள் வெளியான போது தான் நமக்கு விவரமேதெரியும். அப்போதே டிசம்பர் 21 ஆம் தேதி டெல்லியில் வரவேற்பு நிகழ்ச்சியிருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதோ நேற்று டிசம்பர் 21 2ஜி தீர்ப்பு,ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் என்ற பரபரப்பில் இந்த நிகழ்ச்சியை கொஞ்சம் மறந்திருப்போம். இதோ திருமண வரவேற்பு பற்றிய சில சுவாரஸ்ய விஷயங்களின் தொகுப்பு வந்திருக்கிறது. அதோடு ஏராளமான புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணைக்கப்பட்டிருக்கிறது பார்த்து ரசித்திடுங்கள்.

டெல்லியில் இருக்கும் தாஜ் பேலஸ் ஹோட்டலில் தான் வரவேற்பு நிகழ்ச்சி. திருமண ஆடையினைப் பார்த்து இவர்கள் வரவேற்பிற்கு எந்த ஆடை செலக்ட் செய்வார்கள் என்று நாம் யூகித்து வைத்திருந்தவற்றை எல்லம தவிடு பொடி ஆக்கியிருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

அனுஷ்காவைப் பற்றியே பேசி நம் ஹீரோவை விட்டுவிட்டோமே அனுஷ்காவிற்கு சற்றும்குறையவில்லை விராத்தின் ராயல் கிராண்ட் ஸ்டைல். கருப்பு நிற ஷெர்வானி அதற்கு மேட்சிங்காக வெள்ளை நிற பைஜாமா.அதோடு இதில் முத்தாய்ப்பாக பஸ்மினா வகை ஷால் தான்.

Virat Anushka Wedding Reception Stunning video

Recommended