யுவராஜ் சிங்கின் ஆறு சிக்ஸர்களுக்கு காரணம் லஸ்ஸிதான்- வீடியோ

  • 7 years ago
யுவராஜ் சிங்கின் ஆறு சிக்ஸர்களுக்கு காரணம் லஸ்ஸிதான் என்று ஜான்டி ரோட்ஸ் குறிப்பிட்டு இருக்கிறார். இதுகுறித்து அவர் டிவிட்டரில் காமெடியாக போஸ்ட் போட்டு இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் அவர் லஸ்ஸி குடிக்கும் புகைப்படம் ஒன்றையும் இதனுடன் வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்திற்கு கீழ் லஸ்ஸியின் அருமை பெருமைகளை பற்றி எழுதியுள்ளார். இந்த இரண்டு டிவிட்டிற்கும் யுவராஜ் சிங் பதில் அளித்துள்ளார். இவர்கள் டிவிட்டரில் காமெடியாக லஸ்ஸி குறித்து பேசிக்கொண்டது வைரல் ஆகி இருக்கிறது.

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஜான்டி ரோட்ஸ் இந்திய நாட்டின் மீது அதிக விருப்பம் கொண்டவர். இந்தியாவின் மீதான பிரியத்தால் தன்னுடைய மக்களுக்கு இந்தியா என்ற பெயர் வைத்தார். அப்போது அவர் இந்திய அணிக்கு எதிராக இங்கு கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டு இருந்தார். இந்த சம்பவம் அப்போது கிரிக்கெட் உலகில் பெரிய அளவில் வைரல் ஆனது.

தற்போது இந்தியாவில் இருக்கும் அவர் லஸ்ஸி குறித்து டிவிட் செய்துள்ளார். இவர் இந்தியாவிற்கு சுற்று பார்க்க வந்துள்ளார். போட்டோவுடன் டிவிட் செய்து இருக்கும் அவர் ''ஜெய்ப்பூரின் பிரபலமான லஸ்ஸி கடை. 1944ல் இருந்து சுவை மாறாமல் அதே தரத்துடன் செயல்படுகிறது'' என்று அந்த லஸ்ஸி கடை குறித்து எழுதியுள்ளார்.

Jonty Rhodes says Lessi is Secret of Yuvraj success. In his official twitter handle he says that, ''Famous Lassi wala of Jaipur #perfection since 1944 #jaipur #eatlocal'' in his anaother tweet, ''And apparently the secret behind @YUVSTRONG12 ‘s 6hitting power!!!''. Yuvraj replies to this tweet as ''And also the secret of your legendary catches'' in his own way.