பெண்ணை அவமதித்து, அருவி படத்தை மீடியா பாராட்டுவது மோசமான விஷயம் - லக்ஷ்மி ராமகிருஷ்ணன்- வீடியோ

  • 6 years ago
மீடியாவில் பெண்ணாக அதுவும் வெளிப்படையாக பேசுபவராக, சில வழிகளில் வெற்றிகரமாக, பிராமண சமூகத்தில் பிறந்து அதுவும் பாலக்காட்டு அய்யர் பாஷை பேசி, தமிழகத்தில் செட்டிலானவரின் நிலை ஹெச்ஐவியால் பாதிக்கப்படுவதை விட மோசம் என்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

அருண் பிரபு இயக்கத்தில் அதிதி பாலன் நடித்துள்ள அருவி படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை டேமேஜ் செய்துவிட்டனர்.

இதை பார்த்து லட்சுமி ராமகிருஷ்ணன் கோபத்தில் உள்ளார்.
அருவி படத்தை பார்த்த பிறகும்) இன்னுமா உயிருடன் இருக்கிறீர்கள்... நம்ப முடியவில்லை. என்னம்மா இப்படி பண்றீங்களே மா என்று ஒருவர் லட்சுமியிடம் ட்விட்டரில் கேட்டார்.
உன்னை மாதிரி ஆளெல்லாம் உயிரோட இருக்கும்போது, எனக்கென்னடா ?? என்று லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார்.

மீடியாவில் பெண்ணாக அதுவும் வெளிப்படையாக பேசுபவராக, சில வழிகளில் வெற்றிகரமாக, பிராமண சமூகத்தில் பிறந்து அதுவும் பாலக்காட்டு அய்யர் பாஷை பேசி, தமிழகத்தில் செட்டிலானவரின் நிலை ஹெச்ஐவியால் பாதிக்கப்படுவதை விட மோசம் என்கிறார் லட்சுமி. அவமதிப்பு மற்றும் ஒரு பெண்ணை கலாய்த்தும் பிரபல மீடியா ஆட்கள் இந்த படத்தை பாராட்டுவது மோசமான விஷயம் ஆகும் என்று லட்சுமி ட்வீட்டியுள்ளார்.


Actress Lakshmy Ramakrishnan tweeted that, 'Being a Woman, that too outspoken, in media , successful in some ways and happened to be born in the so called 'brahmin' community, that too having a Palakkad Iyer accent and settled in Tamilnadu is worse than being affected with HIV'

Recommended