ஆர்.கே.நகர் அக்கப்போர் எதிரொலி..திமுக-வில் அப்படியாமே!- வீடியோ

  • 7 years ago
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தாம் ஓரங்கட்டப்படுவதால் கொந்தளிப்பில் இருக்கும் திமுகவின் திருவண்ணாமலை பிரமுகர் கட்சியை விட்டே வெளியேறி தேசிய கட்சியில் ஐக்கியமாகப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலால் தி.மு.கவின் சீனியர் நிர்வாகிகள் முதல் கடைமட்ட நிர்வாகிகள் பலர் சோர்வில் ஆழ்ந்துள்ளனராம். தேர்தல் வேலைகளில் ஏகப்பட்ட உள்ளடிகள் நடப்பதால் சீனியர்கள் பலரும் ஒதுங்கிவிட்டனராம்.

தம்முடன் நெருக்கமாக இருந்த திருவண்ணாமலை பிரமுகரையும் தேர்தல் பணியில் இருந்தே விலக்கிவிட்டாராம் திமுக 'செயல்'. இதனால் விரக்தியின் உச்சத்தில் இருக்கும் திருவண்ணாமலை பிரமுகரோ, திமுகவை விட்டே செல்லும் முடிவில் இருக்கிறாராம்.ஆர்.கே.நகரில் தேர்தல் நாள் நெருங்க நெருங்க அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வலம் வருகின்றனர் தி.மு.க நிர்வாகிகள். டி.டி.வி.தினகரன் மற்றும் மதுசூதனன் தரப்பினரின் பண விநியோகத்தால் தி.மு.க மூன்றாம் இடத்தை நோக்கித் தள்ளப்படும் சூழல் உருவாகியுள்ளது.

அதிலும், தி.மு.கவின் கீழ்மட்ட நிர்வாகிகள் பலர் தினகரன் பக்கம் சாய்ந்துவிட்டதாக அறிவாலயத்துக்குத் தகவல் சென்றுள்ளது. இதையடுத்து, தி.மு.க முக்கிய நிர்வாகியிடம் பேசிய ஆர்.கே.நகர் வட்ட பிரதிநிதி ஒருவர், ஒவ்வொரு பூத்துகளிலும் நம்முடைய ஆட்கள் இருந்தால்தான் வாக்குப்பதிவு நாளன்று உற்சாகத்தோடு வேலை பார்க்க முடியும். கீழ்மட்ட நிர்வாகிகள் பலரும் பதவியில்லாமல் பணம் இல்லாமல் தவிக்கின்றனர். இவர்களது தேவையைப் புரிந்து கொண்டு தினகரன் ஆட்கள் புகுந்து விளையாடுகின்றனர். வருகிற பணத்தை ஏன் விட வேண்டும் என அவர்களும் தினகரன் ஆட்களாக மாறிவிட்டனர். இதே நிலைமை நீடித்தால் மூன்றாம் இடத்தை நோக்கித்தான் தள்ளப்படுவோம்' எனக் கூற, அதிர்ந்து போன அந்தப் புள்ளி அடிமட்ட நிர்வாகிகளுக்குத் தேவையானதை செட்டில் செய்திருக்கிறார்.

இதையடுத்து, தொகுதியில் உள்ள பாகங்களுக்குப் பொறுப்பேற்ற தி.மு.க எம்.எல்.ஏக்கள் தாராளமாக செலவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய வடசென்னை தி.மு.க உடன்பிறப்பு ஒருவர், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் தி.மு.கவினருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. தொகுதியில் இருக்கும் வார்டுகளை எல்லாம் பாகமாக பிரித்துள்ளனர். ஒவ்வொரு பாகத்துக்கும் ஒவ்வொரு எம்.எல்.ஏக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த பாகத்தில் உள்ள ஓட்டுக்களை தி.மு.கவுக்கு விழச் செய்வதுதான் இவர்களது வேலை. இந்தப் பணியில் திருவண்ணாமலை பிரமுகரைத் தவிர அனைவரும் ஈடுபட்டுள்ளனர். பசையுள்ள நிர்வாகியான திருவண்ணாமலை பிரமுகருக்கு பொறுப்பு கொடுக்கப்படாததில் பல உள்ளடிகள் நடந்துள்ளன. குறிப்பாக அறிவாலயத்தின் நகைச்சுவை நாயகனுக்குத்தான் முக்கிய பங்காம்.


Here the Political Gossip on the DMK.