கோஹ்லியை பாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடிய ரசிகர்கள்- வீடியோ

  • 6 years ago
பாகிஸ்தானில், கூகுளில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்களில் கோஹ்லி முதல் இடத்தில் இருக்கிறார். பல முக்கிய கிரிக்கெட் வீரர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு கோஹ்லி முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்டது இதுவே முதல் முறையாகும். கோஹ்லியை பாகிஸ்தான் ரசிகர்கள் தேடியதை அறிந்த இந்திய ரசிகர்கள் டிவிட்டரில் அது குறித்து எழுதி வருகின்றனர்.

ஷாஹித் அப்ரிடி அணியில் இருந்த போது பல முறை அவர் முதல் இடம் பிடித்து இருக்கிறார். ஆனால் இந்த முறை கோஹ்லி அவரை பின்னுக்கு தள்ளிவிட்டு முதல் இடம் பிடித்துள்ளார்.
கோஹ்லி எப்போதும் இந்திய அணியை மதிப்பதை போலவே பாகிஸ்தான் அணியையும் மதிக்க கூடியவர். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது அமீரின் பந்துவீச்சு குறித்து பலமுறை பாராட்டி இருக்கிறார். என்னால் அவரது பந்து வீச்சை மட்டுமே சமாளிக்க முடியாது என்று கூறியிருந்தார். இவர்கள் இருவரும் அந்த நிகழ்விற்கு பின் நண்பர்கள் ஆனது குறிப்பிடத்தக்கது.

Google says Kohli is highly searched cricketer in Pakistan in 2017. As per google trends Pakistan skipper Sarfraz Ahmed, bowle Mohammad Amir and Ahmed Shehzad took next places to Kohli.

Recommended