திமுக நிர்வாகிகளுக்கு மரியாதை கொடுத்த அதிமுக நிர்வாகிகள்- வீடியோ

  • 6 years ago
கட்சியின் சார்பாகதான் நாம் வேறுபட்டுள்ளோம் மனதளவில் நாம் அனைவரும் உடன் பிறவா அண்ணன் தம்பிகள் தான் என்று ஆலோசனை கூட்டத்தில் திமுக அதிமுக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசிக்கொண்ட சம்பவம் உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.

ஆர் கே நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவது குறித்து அனைத்து கட்சி முக்கிய நிர்வாகிகளை அழைத்து அவர்களின் கருத்துக்களை தேர்தல் ஆணையம் கேட்டறிந்தது. அப்போது அதிமுக திமுக உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். தேர்தல் ஆணைய அதிகாரிகள் கட்சியின் நிர்வாகிகளை ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பதற்கு முன் அனைவரும் ஒரு அறையில் இருந்தனர். அவர்களுக்கு முதலில் இனிப்புகளும் காரங்களும் வழங்கப்பட்டது. அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தம்பிதுரை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அறையில் முதலில் அமர்ந்திருந்தனர். பின்னர் திமுக நிர்வாகிகள் துரைமுருகன் முக ஸ்டாலின் உள்ளிட்டோரும் அறைக்குள் வந்தனர். திமுகவினர் வருவதை கண்ட அதிமுகவினர் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். பின்னர் துரைமுருகனும், தம்பிதுரை மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் உடல்நலம் குறித்தும் பொது விஷயங்கள் குறித்தும் சிரித்தபடி பேசினர். அவ்வப்போது ஸ்டாலினும் அவர்களுடன் பேசினார். கட்சி ரீதியாக திமுகவும் அதிமுகவும் எலியும் பூனையுமாக இருந்தாலும் மனதளவில் அனைவரும் ஒன்றுதான் என்பதை நேற்று நடத்த கூட்டத்திற்கு முன் வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் திமுகவினர் மீது அதிமுக நிர்வாகிகள் வைத்திருக்கும் மரியாதையை நேற்று அவர்கள் வெளிப்படுத்தியும் உள்ளனர். மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவின் போது திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆட்சி செய்ய கூடாது என்றுதான் நினைத்தோமே தவிர ஆனால் ஆண்டவனிடம் செல்ல வேண்டும் என்று நினைக்க வில்லை என்று கூறியது குறிப்பிடதக்கது.

Des : We are different on behalf of the party. We are all mentally born and brother of our brothers and sisters.

Recommended