குஜராத்தில் தபால் வாக்குகளில் முன்னணியில் பாஜக- வீடியோ

  • 6 years ago
குஜராத் தபால் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.8.25 மணி வரையிலான தகவல்படி குஜராத்தில் பாஜக 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தது. தபால் வாக்குகளையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது.

குஜராத்தில் 37 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 1251 கேமராக்கள் பொருத்தம் -குஜராத்தில் 37, இமாச்சலில் 42 மையங்களில் வாக்கு எண்ணிக்கை குஜராத்தில் 182 தொகுதிகளுக்கான தேர்தல் டிசம்பர் 9,14 என இரு கட்டமாக நடைபெற்றது. முதல் கட்டமாக 89, 2-வது கட்டமாக 93 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

முதல் கட்டமாக டிசம்பர் 9-ந் தேதியன்று குஜராத்தின் சவுராஷ்டிரா, கட்சி மற்றும் தெற்கு குஜராத்தில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

முதல் கட்டத்தில் 66.75% வாக்குகள் பதிவாகி இருந்தன, 2-வது கட்டமாக வடக்கு மற்றும் மத்திய குஜராத்தில் 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 14-ல் வாக்குப் பதிவு நடைபெற்றது. 2-வது கட்டத்தில் 68.41% வாக்குகள் பதிவாகின. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 4.35 கோடி. இவர்களில் 2.97 கோடி பேர் இரு கட்ட தேர்தல்களிலும் வாக்களித்தனர். நர்மதா மாவட்டத்தில் அதிகபட்சமாக 79.15%; துவாரகாவில் குறைந்தபட்சமாக 59.39% வாக்குகள் பதிவாகி இருந்தன.

Counting for the Gujarat and Himachal Pradesh Assembly Elections will be held on Today.

Recommended