சென்னையில் அதிர்ச்சி.. நீட் வகுப்புக்கு சென்ற மாணவி கடத்தி பாலியல் பலாத்காரம்!- வீடியோ

  • 6 years ago
முகப்பேரில் மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 2 பெறியியல் மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை முகப்பேரை சேர்ந்த மாணவி ஒருவர் துபாயில் ஓராண்டு மருத்துவப்படிப்பு படித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார். இவர் சென்னையில் மருத்துவம் படிக்க முயற்சி செய்துவருகிறார்.

இதற்காக சென்னையில் நீட் தேர்வுக்காக பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். வழக்கம்போல் நீட் வகுப்புக்கு சென்ற அவரை பொறியியல் மாணவர்கள் சிலர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் அண்ணாநகர் மகளில் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து பொறியியல் மாணவர்கள் ப்ரவின் மற்றும் சுரேந்தர் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.விசாரணையில் பள்ளியில் வகுப்பு சீனியரான ப்ரவீன் ஒருதலை காதல் காரணமாக மாணவியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. சென்னை அண்ணா நகரில் உள்ள நண்பர் வீட்டில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Recommended