பாலிவுட்டை புகழ்ந்து நெட்டிசன்களிடம் வசமாக சிக்கி கொண்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணன்- வீடியோ

  • 6 years ago
நடிகையும், நிகழ்ச்சித் தொகுப்பாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன் எப்போதும் தனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை தைரியமாக சொல்லக்கூடியவர். பல விஷயங்களில் அப்படி பேசி ரசிகர்களின் கோபத்திற்கும் ஆளாகியுள்ளார்.

அதிலும் அவர் பிரபல தொலைக்காட்சியில் நடத்தும் ஒரு நிகழ்ச்சியால் நிறைய பிரச்சனைகளுக்கும், கிண்டல்களுக்கும் ஆளாகியது அனைவருக்கும் தெரிந்ததே.

இந்நிலையில், தமிழ் சினிமாவை விமர்சித்து இன்னொரு சிக்கலில் மாட்டியிருக்கிறார். அவரை ட்விட்டரில் நெட்டிசன்கல் கலாய்த்து வருகின்றனர்.

லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய ட்விட்டரில், தமிழ்நாட்டில் மற்றவர்களை கிண்டல் செய்வது, ஒரு நல்ல விஷயத்தை கலாய்த்து தங்களது படத்தில் காட்டுவதுமாக இருக்கின்றனர். ஆனால் பாலிவுட் சினிமாவில் நிஜ ஹீரோக்களை வைத்து படம் எடுக்கிறார்கள். நிஜ Padman அவர்களை பார்த்தது சந்தோஷம் என ட்வீட் செய்திருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பாலிவுட் மிகவும் மோசமானது. அவர்களின் ஒரு சில படங்களை பார்த்துவிட்டு இப்படிக் கூறக்கூடாது. இங்கேயும் அறம், அருவி போன்ற தரமான படங்கள் நிறைய இருக்கிறது என பதில் கூறிவருகின்றனர்.
பாலிவுட்டில் வரும் 'பேடுமேன்' படத்தை பாராட்டும் நீங்க, 'அருவி' படம் உருவாகும்போது எங்க போயிருந்தீங்க' என ஒருவர் கமென்ட் செய்துள்ளார்.


Lakshmi Ramakrishnan, an actress and anchor, In many cases she has been angry with the fans. In this case, she has been criticized Tamil film industry. Netizens are trolled on her in Twitter.

Recommended