காற்று மாசுபாட்டால் அல்லல்படும் டெல்லியில் பட்டாசுகளை வெடித்து கொண்டாடிய காங்கிரஸ் தொண்டர்கள்
  • 6 years ago
ஏற்கனவே காற்று மாசால் சிக்கி திணறும் தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் சரமாரியாக வெடிகளை கொளுத்தி போட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் 87வது தலைவராக ராகுல்காந்தி இன்று பொறுப்பேற்றார். ராகுல் காந்தியின் பதவியேற்பு நிகழ்ச்சி டெல்லி அக்பர் சாலையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் ராகுல் காந்தி, 19 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ராகுல் காந்தியிடம் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டதன் சான்றிதழ் வழங்கப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 87-வது தலைவராகவும் நேரு குடும்பத்தில் இருந்து 6-வது காங்கிரஸ் தலைவராகவும் ராகுல் காந்தி தேர்வாகியுள்ளார்.
ராகுல்காந்தி பொறுப்பேற்றுக்கொண்டதும், அங்கு திரண்டிருந்த காங்கிரஸ் கட்சியர் சரமாரியாக வெடிகளை கொளுத்தினர். பெரிய பெரிய பெட்டிகளில் வரிசையாக கொளுத்தப்பட்ட வெடியால் சத்தம் விண்ணை பிளந்தது.

Rahul gandhi takes oath as national congress leader. Congress party workers celebrates this as festival. Congress workers burned lots of crackers to celebrat rahul as congress leader in Air polluted Delhi.
Recommended