இளம்பெண் குளித்ததை பார்த்ததாக கூறி ஆளுநரை முற்றுகையிட்ட கிராம மக்கள்- வீடியோ

  • 6 years ago
கடலூர் வண்டிபாளையத்தில் ஆய்வு நடத்த வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கீற்று மறைப்புக்குள் இளம் பெண் ஒருவர் குளித்ததையும் பார்த்ததாக பகீர் புகார் எழுந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.


அதிகார வரம்பை மீறி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடலூரில் இன்று ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் தலைமையில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சென்னையில் இருந்து, வைகை விரைவு ரயில் மூலம் வந்தடைந்தார். விருத்தாசலத்தில் கால்களை இழந்த 301 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை ஆளுநர் வழங்கினார்.

Ladies of Cuddlore Vandipalayam accuses that TN Governor Banwarilal purohit saw them while they were bathing

Recommended