ஸ்கூல் புத்தகத்தில் இடம்பெற்ற தளபதி விஜய் படம்.. பொங்கல் ஸ்பெஷல்- வீடியோ

  • 7 years ago
நடிகர் விஜய்க்கு உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். "ஆளப்போறான் தமிழன்" என்ற பாடல் மூலம் மெர்சல் படத்தில் மக்களைக் கவர்ந்து ரசிகர்களின் ஆசை நாயகனாக மாறியவர் விஜய். அந்தப் படத்தில் தமிழர்களுக்கு உரித்தான வேஷ்டி சட்டையில் நடித்து கலக்கியிருப்பார். மருத்துவ துறை சம்பந்தமான விருது பெறுவதற்காக வெளிநாட்டிற்கு செல்லும் போதும் வேஷ்டி சட்டையிலேயே சென்றிருப்பார். அந்த காட்சி ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் சிபிஎஸ்இ மூன்றாவது வகுப்பு பாடப் புத்தகத்தில் வேஷ்டி சட்டை தமிழர்களின் கலாச்சாரம் என்ற ஒரு தலைப்பில் விஜய்யின் வேஷ்டி சட்டை புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. புத்தகத்தில் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சந்தோஷத்தில் தற்போது அந்தப் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். பொங்கல் விழாவைப் பற்றிய அந்தப் பத்தியில், வேஷ்டி சட்டைதான் தமிழர்களின் பாரம்பரிய உடை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, 'வேலாயுதம்' படத்தில் விஜய் வேட்டி சட்டையுடன் நடந்து நடந்து வரும் புகைப்படத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.


Actor Vijay has fans from around the world. In this case, CBSE's third standard textbook has been used by Vijay's photo on a topic titled Traditional. The fans who have seen the photograph in the book are now happy to share that photo.

Recommended