சென்னை பல்லாவரத்திரல் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் படுகொலை..வீடியோ

  • 7 years ago
பல்லாவரத்தில் 2 குழந்தைகள், மனைவி மற்றும் தாயை கழுத்தை அறுத்து தாமோதரன் என்ற துணிக்கடை உரிமையாளர் படுகொலை செய்தார். கழுத்தை அறுத்து தானும் தற்கொலைக்கு முயன்ற அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மலில் துணிக்கடை நடத்தி வருபவர் தாமோதரன். அருகில் உள்ள கிருஷ்ணா நகரில் தாய், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.இந்நிலையில் இன்று திடீரென தாய், மனைவி மற்றும் 2 குழந்தைகளை கழுத்தை அறுத்து தாமோதரன் படுகொலை செய்துள்ளார். மேலும் தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தாமோதரனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 2 குழந்தைகள் உட்பட 4 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாமோதரன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் கடன் தொல்லையால் குடும்பத்தினரை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

பல்லாவரத்தில் 2 குழந்தைகள், மனைவி மற்றும் தாயை கழுத்தை அறுத்து தாமோதரன் என்ற துணிக்கடை உரிமையாளர் படுகொலை செய்தார். கழுத்தை அறுத்து தானும் தற்கொலைக்கு முயன்ற அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.



A textiles owner killed his 2 children, mother and wife near in Chennai Pallavaram. The textiles owner Dhamotharan also commit suicide attempt.

Recommended