கடல் வழி விமானம்.. நமக்குத்தான் "செய்தி".. 2002லேயே பயன்படுத்திய விடுதலைப் புலிகள்!..வீடியோ

  • 6 years ago
பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் தேர்தல் பிரசாரத்துக்கு நீர்வழி விமானத்தை பயன்படுத்துகிறார். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமோ 2002-ம் ஆண்டே கடல்வழி விமானத்தை பயன்படுத்திவிட்டனர் என்பது வரலாறு. குஜராத்தில் சபர்மதி ஆற்றில் நீர்வழி விமானம் இயக்கபடுகிறது. இந்த விமானம் மூலமாக தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி மேற்கொள்கிறார். இந்தியாவுக்கு கடல்வழி அல்லது நீர்வழி விமான சேவை புதியதாக இருக்கலாம். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 2002-ம் ஆண்டிலேயே இதனை பயன்படுத்தினார்.

2002-ம் ஆண்டு இலங்கை அரசுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் சமாதான பேச்சுவார்த்தையை தொடங்கியிருந்தனர். இதையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சர்வதேச செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த் பிரஸ் மீட்டில் பங்கேற்பதற்காக லண்டனில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் தமிழீழத்துக்கு வருகை தர இருந்தார். ஆனால் இதற்கு உரிய அனுமதிகள் கிடைக்கவில்லை.

இதையடுத்து நார்வேயின் உதவியுடன் மாலத்தீவுக்கு பாலசிங்கம் வருகை தந்தார். அங்கிருந்து கடல்வழி விமானம் மூலமாக வன்னியின் இரணைமடுகுளத்துக்கு பாலசிங்கமும் அவரது மனைவி அடேல் அம்மையாரும் வருகை தந்தனர்.

Recommended