தம்பதிகளுக்கான முத்த போட்டி நடத்திய எம்.எல்.ஏ.: வைரல் வீடியோ

  • 6 years ago
திருமணமான தம்பதிகளுக்கு இடையே முத்த போட்டி நடத்திய 2 ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்ய பாஜக வலியுறுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பாக்கூர் கிராமத்தில் நடந்த திருவிழாவின் போது பழங்குடியின தம்பதிகளுக்கு இடையேயான முத்த போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. சைமன் மரான்டி ஏற்பாடு செய்திருந்தார். போட்டி நடந்தபோது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ.வான ஸ்டீபன் மரான்டி அங்கு இருந்தார்.

போட்டியில் 20 தம்பதிகள் கலந்து கொண்டு விடாமல் முத்தம் கொடுத்தனர். இதை கிராம மக்கள் வேடிக்கை பார்த்ததுடன் தங்களின் செல்போன்களில் வீடியோவும் எடுத்தனர். பழங்குடியின தம்பதிகளுக்கு இடையேயான நெருக்கத்தை அதிகரிக்கவும், விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கவும் இந்த போட்டியை நடத்தியதாக சைமன் மரான்டி

முத்த போட்டியின்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. இந்நிலையில் கலாச்சாரத்தை அவமதித்துவிட்டதாகக் கூறி சைமன், ஸ்டீபன் ஆகியோரை உடனடியாக சஸ்பெண்ட் செய்யுமாறு ஜார்க்கண்ட் மாநில பாஜக துணை தலைவர் ஹேம்லால் முர்மு வலியுறுத்தியுள்ளார்.


BJP wants two MLAs from Jharkhand Mukti Morcha to get suspended from the assembly for conducting kissing competition for tribal couples during a traditional village fair in Pakur.

Recommended