ரஜினிகாந்த அரசியலுக்கு வருவதற்கான வழி இன்னும் வரவில்லை- வீடியோ

  • 6 years ago
ரஜினிகாந்த அரசியலுக்கு வருவதற்கான வழி இன்னும் வரவில்லை - கிருஷ்ணகிரியில் ரஜினிகாந்த் அண்ணன் சத்தியநாராயனராவ் பேட்டி

கிருஷ்ணகிரியில் நடந்த ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் அண்ணன் சத்தியநாராயனராவ் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கான வழி இன்னும் வரவில்லை என பேட்டி அளித்தார்.

கிருஷ்ணகிரியில் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில், ரஜினியின் 68வது பிறந்த நாள் விழா நடந்தது. டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்களுக்கு நலத்திட்டம் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவிற்கு ரசிகர் மன்றத்தின் மாவட்ட தலைவரும், ஸ்ரீதேவராஜ் குரூப்ஸ் நிர்வாக இயக்குநரும், சேலம் சரக ஊர்காவல்படை துணை தளபதியுமான மதியழகன் தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணராவ் பங்கேற்று, துப்புரவு பணியாளர் 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இது போன்ற விழாக்கள் நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து அவரே தெரிவிப்பார். அது குறித்து நான் எதுவும் கூற இயலாது. அவர் அரசியலுக்கு வந்தால் சந்தோஷம். தற்போது ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. கொஞ்சம் பொறுமையாக இருங்கள். அதற்கு பின்னர் அரசியல் குறித்த முடிவை தெரிவிப்பார். அரசியலுக்கு வரும் ஆசை இருக்கு ஆனால் அதற்கான வழி இன்னும் வரவில்லை என பேசினார்.

முன்னதாக விழாவில் துப்புரவு பணியாளர்களிடம் பேசிய அவர் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவை தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கொண்டாடி வருகின்றனர். அவர் மீது தமிழக மக்கள் எவ்வளவு அன்பும், பாசமும் வைத்திருந்தால் இப்படி கொண்டாடுவார்கள். நாங்கள் எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தோமோ தெரியவில்லை. இந்த விழாவில் துப்புரவு தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, நலத்திட்ட உதவிகள் வழங்குவது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால் துப்புரவு தொழிலாளர்கள் பவித்திரமான வேலையை செய்கின்றனர். இவர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் போதாது. எனவே, துப்புரவு தொழிலாளர்களான நீங்கள் நன்றாக இருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகள் நன்றாக படித்து, மேல்மட்டத்திற்கு சென்று நன்றாக வைத்துகொள்ள வேண்டும். அத்துடன் நீங்கள் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி துப்புரவு பணியில் ஈடுபட வேண்டும். ரஜினிகாந்திற்கு எந்த ஆசையும் இல்லை. நீங்கள் எல்லாம் அவருக்கு கொடுத்துள்ளீர்கள். மக்களுக்கு செய்ய வேண்டும் என்பது தான் அவரது ஆசை. ஆனால் எந்த விதத்திலும் செய்வார் என்பது தெரியாது. அவர் தான் அது குறித்து முடிவெடுப்பார் என பேசினார்.

When Rajinikanth will announces his political entry?-brother interview

Recommended