தனி ஒருவன் டோணி... இனியும் அவர் ரிட்டையர் ஆகணுமா பாஸ்?- வீடியோ

  • 7 years ago
கடந்த சில வாரங்களாக கிரிக்கெட் உலகில் டோணி எப்போது ஓய்வு பெறுவார் என்று பலரும் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். இந்த நிலையில் அவருக்கு எதிராக முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.

டோணி முன்பு போல சரியாக ஆடுவதில்லை என்றும் கருத்து தெரிவித்து இருந்தனர். அதுமட்டும் இல்லாமல் கண்டிப்பாக இந்த வருடத்திற்குள் அவர் ஓய்வு அறிவிக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.
இதன் காரணமாக டோணி மீது அதிக அழுத்தம் வைக்கப்பட்டது. முன்னாள் வீரர்கள் மொத்தமாக டோணிக்கு எதிராக படையெடுத்தனர்.

தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் அதிகம் விமர்சிக்கப்பட்டு வரும் வீரர் டோணி மட்டும்தான். அவர் சரியாக ஆடினாலும் ஆடவில்லை என்றாலும் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். இன்றைய ஒருநாள் போட்டியில் எல்லா வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆகும் போது டோணி மட்டும் தனியாக 65 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அவர் தன் மீது வைக்கப்பட்ட அனைத்து விமர்சனத்திற்கும் பதில் அளித்து இருக்கிறார். தற்போது இதுகுறித்து பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

First one day between India vs Srilanka in Himachal Pradesh Cricket Association Stadium, Dharamsala. India all out for 112 in 38.2 overs. Dhoni took 65 runs. His one man show got trended in social media