கேப்டன் களமிறங்கிட்டாருடோய்... 'என்ன நடக்குது நாட்டுல' பாடல் ஆர்.கே.நகரில் ஒலிபரப்பு!- வீடியோ

  • 7 years ago
விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் தற்போது, ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கும் 'மதுரவீரன்' படத்தில் நடிக்கிறார். இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படத்தில் சமுத்திரக்கனியும் முக்கிய ரோலில் நடிக்கிறார். இப்படத்தின் முதல் சிங்கள் பாடல் 'என்ன நடக்குது நாட்டுல...' என்ற பாடல் ஏற்கெனவே வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒலிபரப்பப்படும் என தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த்தின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்முகபாண்டியன் நடித்த முதல் படமான 'சகாப்தம்' தோல்வியடைந்ததை அடுத்து இந்தப் படத்தைப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள் விஜயகாந்த் குடும்பத்தினர். இந்நிலையில், 'மதுரவீரன்' படத்தின் ஒரு பாடல் ரிலீஸ் ஆனது.

யுகபாரதியின் வரிகளில் உருவாகியிருக்கிறது இந்தப் பாடல். பாடலின் சில வரிகள் கீழே... "என்ன நடக்குது நாட்டுல, அதை எடுத்துச் சொல்லணும் பாட்டுல.. கொள்ளை அடிச்சவன் கூட்டுல, நம்ம குடும்பம் நிக்குது ரோட்டுல.. எதையும் நாம பாக்காம எதுத்து கேள்வி கேக்காம, அடங்கி ஒடுங்கி கிடப்பதால ஆளுக்காளு நாட்டாம..."

Vijayakanth's son Shanmuga pandian is currently acting in the movie 'Maduraveeran' directed by Cinematographer PG Muthiah. The song 'Enna nadakkudhu naattula' from 'Maduraveeran' was released. This song will be broadcast in the RK Nagar by poll election

Recommended