வேலுச்சாமி தூக்கி அடிக்கப்பட்டதற்கு இதான் காரணமாமே.?!- வீடியோ

  • 7 years ago
ஆர்கே நகர் தேர்தல் அதிகாரியாக இருந்த வேலுச்சாமி தூக்கியடிக்கப்பட்டதற்கு விஷால் வேட்புமனு விவகாரம் தான் என தகவல் வெளியாகியுள்ளது. ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் ஆர்கே நகர் தொகுதி தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட வேலுச்சாமி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கடந்த முறை இருந்த பிரவீன் நாயர் புதிய தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது
விஷால் வேட்புமனு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வேலுச்சாமியை மாற்றும் முடிவை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 5ஆம் தேதி விஷாலின் வேட்புமனுவை ஏற்பதில் குளறுபடி ஏற்பட்டது.

முன்னதாக நிராகரிப்பு என்று கூறப்பட்ட நிலையில் பின்னர் ஏற்பு என தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து நள்ளிரவில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் விஷால் புகார் அளித்தார். ஆளும்கட்சியின் மிரட்டலாலேயே தன்னை முன்மொழிந்தவர்கள் பின்வாங்கியதாக குற்றம்சாட்டினார் விஷால்.

Election commission appoited Praveen Nair as a new electoral officer. Velusami, who was appointed as the RK Nagar Electoral Officer, has been changed due to Vishal nomination rejected issue

Recommended