ஓட்டுதான் முதலில்.. தாலி அப்புறமாக கட்டலாம்.. குஜராத் வாக்குப் பதிவு சுவாரசியங்கள்- வீடியோ

  • 7 years ago
குஜராத் முதல் கட்ட வாக்குப் பதிவில் ஏராளமான சுவாரசிய சம்பவங்கள் நடந்துள்ளது. பரூச் வாக்குச் சாவடியில் தாலி கட்டுவதற்கு முன்பாக வாக்களிக்க வேண்டும் என்பதற்காக மணக்கோலத்தில் வந்து மணமக்கள் வாக்களித்தனர். குஜராத்தில் முதல் கட்டமாக 89 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. பல இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதடைந்து இருந்தன. இவற்றை சரி செய்துவிட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இன்றைய வாக்குப் பதிவில் பல சுவாரசிய சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்ராணா. உப்லேடா என்ற இடத்தில் 126 வயது மூதாட்டி அஜிபா வாக்களித்தார்.
பரூச் என்ற வாக்குச் சாவடியில் மணமக்கள் ஜோடியாக வந்து வாக்களித்தனர். தாலி கட்டுவதற்கு முன்னதாக வாக்களித்துவிட வேண்டும் என்பதற்காக உற்றார் உறவினர்களுடன் வாக்குச் சாவடிக்கு வந்திருந்தனர்.

A bride in Baruch casts vote before heading for her wedding ceremony.

Recommended