விஷாலுக்கு திடீர் சுகவீனம்.. ஆளுநரைச் சந்திக்கும் திட்டம் ரத்து!- வீடியோ

  • 6 years ago
தமது வேட்புமனு நிராகரிப்பு தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹதித்தை சந்திப்பதற்காக நேரம் கேட்டுவிட்டு பின்னர் உடல்நல பாதிப்பு காரணமாக அந்த சந்திப்பை விஷால் ரத்து செய்துவிட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விஷால் தாக்கல் செய்த வேட்புமனு முன்மொழிந்தவர்கள் 2 பேர் தங்களது கையெழுத்து இல்லை என்றதால் நிராகரிக்கப்பட்டது. பின்னர் விஷால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவரது மனு ஏற்கப்பட்டது.
மணிநேரங்களிலேயே அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விஷால் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்தார்.

இதன்பின்னர் இந்திய தேர்தல் ஆணையத்தில் தனது வேட்புமனுவை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்தார். ஆனால் தேர்தல் ஆணையமோ தேர்தல் அதிகாரி எடுத்த முடிவே இறுதியானது என்று தெரிவித்துவிட்டது.
பின்னர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் முறையிட விஷால் நேரம் கேட்டிருந்தார். அவருக்கு இன்று நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் தனக்கு திடீர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாக கூறி ஆளுநருடனான சந்திப்பை விஷால் ரத்து செய்துவிட்டார்.

Actor Vishal got appointment to meet TN Governor Banwarilal Purohit in the issue of RK Nagar bypoll nomination rejected. But today cancelled to meet the TN Governor because of his illness.

Recommended