தமிழ் பிறந்தநாள் பாடல் | Tamil Birthday Song, Uthra Unnikrishnan, Arivumathi, Arrol corelli | ValaiTamil.com

  • 7 years ago
நீண்ட நீண்ட காலம்
நீ
நீடு வாழ வேண்டும்!

வானம் தீண்டும் தூரம்
நீ
வளர்ந்து வாழ வேண்டும் !

அன்பு வேண்டும்!
அறிவு வேண்டும்!
பண்பு வேண்டும்!
பரிவு வேண்டும்!

எட்டுத்திக்கும் புகழ வேண்டும்!
எடுத்துக்காட்டு ஆக வேண்டும்!

உலகம் பார்க்க
உனது
பெயரை
நிலவுத் தாளில்
எழுத
வேண்டும்!

சர்க்கரைத் தமிழள்ளித்
தாலாட்டு
நாள்
சொல்லி
வாழ்த்துகிறோம்

பிறந்த நாள் வாழ்த்துகள்!
பிறந்த நாள் வாழ்த்துகள்!
இனிய
பிறந்த நாள்
வாழ்த்துகள்!

பிறந்தநாள் வாழ்த்துகள் ---பெயர்---

பாடல்: பாவலர் அறிவுமதி (Arivumathi)
இசை : அரோல் கரோலி
குரல் : உத்ரா உன்னிகிருஷ்ணன்
தயாரிப்பு: ச.பார்த்தசாரதி

Visit : http://www.valaitamil.com/tamilbirthday/

Recommended