போலீசாரிடமிருந்து தப்பியோடிய கொடூர கொலையாளி தஷ்வந்த் மும்பையில் மீண்டும் கைது- வீடியோ

  • 7 years ago
போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோடிய கொடூர கொலையாளி தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி ஹாசினி பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் தொடர்புள்ள தஷ்வந்த், பின்னர் தனது தாயை கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் தமிழக போலீசார், தஷ்வந்த்தை மும்பையில் கைது செய்தனர். நேற்று இரவு அவரை சென்னை அழைத்து வர மும்பை ஏர்போர்ட் கூட்டி வந்தனர். ஆனால் அங்குதான் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது.
கழிவறை செல்வதாக கூறிச் சென்ற தஷ்வந்த், போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பியோடிவிட்டார். இதனால் சிறுமி ஹாசினி குடும்பத்தாருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

மேலும், மும்பையில் தஷ்வந்த்தை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். மும்பை காவல்துறையும் வழக்கு பதிவு செய்து இவரை தேடினர். இந்த நிலையில் இன்று மதியம் தஷ்வந்த் மும்பை அந்தேரி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்தேரி பகுதியிலுள்ள நெடுஞ்சாலை மோட்டல் ஒன்றில் வைத்து இவர் சிக்கியுள்ளார். கை விலங்கை யாரும் பார்த்துவிட கூடாது என்பதற்காக துணியை கை மீது போட்டு மறைத்துக்கொண்டு உலவியுள்ளார் தஷ்வந்த்.

Dhaswant who earlier escaped from the custody of TN police in Mumbai arrested at Andheri, Mumbai.

Recommended