கௌதம் மேனன் உயிரைக் காப்பாற்றியவர் இவர்தான்... உருக்கமாக நன்றி சொன்ன கௌதம்!- வீடியோ

  • 7 years ago
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெறும் படங்களை எடுத்து வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் தற்போது விக்ரம் நடிக்கும் 'துருவ நட்சத்திரம்' படத்தை எடுத்து வருகிறார். இந்நிலையில் கௌதம் மேனன் நேற்று சென்னை செம்மஞ்சேரி வழியாகச் சென்னை வரும்போது ஒரு டிப்பர் லாரியில் மோதியுள்ளார். இந்த விபத்தில், இவருடைய கார் பெரும் சேதம் அடைந்தது. கௌதம் மேனன் காயங்களுடன் நூலிழையில் உயிர் தப்பினார். உடனே அவரை தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் கௌதம் மேனன். 'மின்னலே', 'வாரணம் ஆயிரம்', 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது விக்ரம் நடிக்கும் 'துருவ நட்சத்திரம்' படத்தை இயக்கி வருகிறார்.
கௌதம் மேனன் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு மாமல்லபுரத்தில் இருந்து செம்மஞ்சேரி வழியாக சென்னை வந்துகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே அவரது கார், டிப்பர் லாரியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், அவரது கார் பெரும் சேதம் அடைந்துள்ளது.

Recommended