'நாட்டாமை' டீச்சர் இப்போ எப்படி இருக்காங்க..?- வீடியோ

  • 7 years ago
1994-ல் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சரத்குமார் டபுள் ஆக்‌ஷனில் நடித்து வெளிவந்து கலக்கிய படம் 'நாட்டாமை'. தமிழில் சூப்பர் ஹிட்டான இந்தப் படம் பல மொழிகளில் ரீமேக் ஆனது.
இந்தப் படத்தின் டீச்சர் கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. அந்த டீச்சர் கேரக்டரில் நடித்த ரக்‌ஷா அதன் பின் பட வாய்ப்புகள் குறைந்து சினிமாவை விட்டு விலகிவிட்டார்.
பின்னர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார் ரக்‌ஷா. தற்போது அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
'நாட்டாமை' படத்தில் வித்தியாசமான பின்னணி இசையோடு சரத்குமாரும் டீச்சரும் ஒரு வீட்டில் நெருக்கமாக இருப்பார்கள் அல்லவா? அந்தப் படம் முழுவதும் நாட்டாமை டீச்சர் அனைவரின் கண் முன்னே வந்து போவார். அந்த டீச்சரின் உண்மையான பெயர் ரக்‌ஷா. 1992-ல் ராமராஜன் நடிப்பில் கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த 'வில்லுப் பாட்டுக்காரன்' படத்தில் அறிமுகமானவர் ரக்‌ஷா. அதன் பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய பல மொழிகளில் ஹீரோயினாக நடித்தார். பிறகு, ஹீரோயின் கதாபாத்திரம் தனக்கு ஒத்து வரவில்லை என கிளாமர் ரோலில் களம் இறங்கினார். அதன் பின்னர் தான் 'நாட்டாமை' மற்றும் 'ஜெமினி' படத்தில் 'ஓ போடு...' பாடல் ஆகியவற்றில் நடித்தார்.


In 1994, Sarathkumar starred 'Nattamai' movie is a super hit in Tamil, has been remade in many languages. No one can easily forget the teacher's role in this film. Raksha who starred in the teacher role then left the cinema industry. Raksha's recent photo was released on social networks.

Recommended