திருப்பூர் பாட்டிக்கு 103-ஆவது ஹேப்பி பர்த்டே... 5 தலைமுறையினருடன் மகிழ்ச்சி கொண்டாட்டம்- வீடியோ

  • 7 years ago
திருப்பூரைச் சேர்ந்த ராமாத்தாள் தனது பேரன், கொள்ளு, எள்ளு பேரன்கள் புடைச்சூழ 5 தலைமுறையினருடன் 103-ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இதனால் அந்த கிராமமே விழா கோலம் பூண்டுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த விவசாயி ராமசாமி. இவர் ராமாத்தாளை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டு ஆணைப்பாளையம் கல்லூரி சாலையில் வசித்து வந்தார். ராமாத்தாளைவிட ராமசாமி 2 வயது இளையவர். இவர்களுக்கு 4 பெண்கள், 11 பேரப்பிள்ளைகள், 12 கொள்ளு பேர பிள்ளைகள், எள்ளு பேர பிள்ளைகள் என உள்ளதால் பாட்டி ராமாத்தாள் சுமார் 5 தலைமுறையினரை கண்டுள்ளார். ராமசாமி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

கணவர் இறந்தவுடன் பாட்டி ராமாத்தாள் தனது இரண்டாவது மகளின் வீட்டில் வசித்து வருகிறார். பாட்டிக்கு நேற்று 102 வயது முடிந்து 103-ஆவது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் 250 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு 42 பேர் பாட்டியின் சொந்தக்காரர்கள். விழாவுக்கு வந்த அனைவரையும் பாட்டி நினைவுகூர்ந்ததால் உறவினர்கள் அவரது நினைவுத்திறனை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Ramathal, 103 years old lady in Tiruppur celebrated her birthday with 5 generations of her grand, great sons- daughters etc. At this age she has no complaint of diabetes, blood pressure etc.

Recommended