தியேட்டர்களில் கார், டூவீலர் பார்க்கிங் கட்டணம்..அரசே அறிவிப்பு..சைக்கிள்களுக்கு ப்ரீயாம்!- வீடியோ

  • 6 years ago
தமிழக அரசு திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் கட்டுப்பாடின்றி வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மாநகராட்சிகளில் உள்ள திரையரங்குகளில் கார் பார்க்கிங்க்கு ரூ.20 ரூபாயும், டூவீலர் பார்க்கிங்க்கு 10 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நகராட்சிகளில் உள்ள திரையரங்குகளில் கார்களுக்கு 15 ரூபாயும், டூவீலர்களுக்கு 7 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கிராமங்களில் உள்ள திரையரங்கு பார்க்கிங்கில் கார்களுக்கு 5 ரூபாயும் டூவீலர்களுக்கு 3 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அனைத்து திரையரங்குகளின் பார்க்கிங்களிலும் சைக்கிள்களுக்கு இலவசம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tamilnadu Government has set parking fee for theaters. In theaters in the corporation, car parking is Rs. 20 and Rs. 10 for the two wheeler Parking. There is no fees for bicycle.

Recommended