• 8 years ago

அமெரிக்காவில் பூங்காவில் 16 வயது மாணவனுடன் 28 வயது முன்னாள் டீச்சர் தகாத உறவு கொண்டதால் அவர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள பெனிங்டன்னில் உள்ள பள்ளி ஒன்று உள்ளது. இங்கு அலிசியா மரி ரெட்டி (28) என்ற இந்திய வம்சாவளி ஆசிரியை பணியாற்றி வந்தார். பால்டிமோரில் வசித்து வரும் இவர் கடந்த 2016-2017-ஆம் ஆண்டு அந்த பள்ளியில் படித்து வந்த 16 வயது மாணவனுடன் நெருங்கி பழகினார். நாளடைவில் இது காதலாக மாறியது. இதையடுத்து அங்குள்ள ஒரு பூங்காவில் அந்த சிறுவனுடன் தகாத உறவு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்துக்கு தெரிய வந்தவுடன் போலீஸில் அந்த டீச்சர் மீது கடந்த மாதம் புகார் கொடுத்துவிட்டது பள்ளி நிர்வாகம். பின்னர் மாணவனின் பெற்றோருக்கும் இதுகுறித்து தகவல் அளித்துவிட்டது. இந்நிலையில் டீச்சரின் இந்த அருவருப்பான செயலை விசாரித்து வந்த போலீஸார் அவரை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவர் பால்டிமோரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை அந்த டீச்சரின் மீது இதுமாதிரியான புகார்கள் எழுந்ததில்லை என்று பழைய இடத்தில் பணியாற்றியவர்கள் தெரிவித்துள்ளனர்.

Category

🗞
News

Recommended