விமல் படத்தில் ஜூலி நடிக்கிறார், ஆனால் அவர் ஒன்னும்....வீடியோ

  • 7 years ago

விமல் நடிக்கும் மன்னர் வகையறா படத்தில் ஜூலி நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஜூலிக்கு படங்களில் நடிக்கும் ஆசை ஏற்பட்டது. இந்நிலையில் ஜூலி மணக்கோலத்தில் விமலுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதை பார்த்தவர்கள் ஜூலி விமலுக்கு ஜோடியா என்று வியந்தனர். ஜூலி, விமல், பிரபு உள்ளிட்டோர் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதிலும் ஜூலி மணக்கோலத்தில் தான் அமர்ந்துள்ளார். நான் விமல் படத்தில் நடிப்பது உண்மை தான். ஆனால் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்பதை தற்போது கூற முடியாது. அதற்கு எனக்கு அனுமதி இல்லை என்கிறார் ஜூலி.
படத்தில் ஜூலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். ஆனந்தி தான் ஹீரோயின் ஜூலி இல்லை என்று கூறப்படுகிறது. படம் வந்தால் உண்மை தெரியப் போகிறது.
தான் தொகுத்து வழங்கும் ஓடி விளையாடு பாப்பா பற்றி ட்வீட்டும் ஜூலி படம் குறித்து வாய் திறக்கவே இல்லை. தான் கோலிவுட்டில் அறிமுகமாவதை சொல்லவே இல்லை.

A new photo of Julie with Vimal, Prabhu and others on the sets of Mannar Vagaiyara has been released. Julie who is hosting a programme in Kalaignar TV has made her debut in Kollywood.

Recommended