இறந்த அப்பாவின் கிளவுசுடன் விளையாடிய கீப்பர்... டெஸ்ட் போட்டியில் நடந்த நெகிழ்ச்சி!- வீடியோ

  • 7 years ago
இங்கிலாந்து விக்கெட் கீப்பர் 'ஜானி பெயர்ஸ்டோ' 39 வருடம் முன் இறந்து போன தன் அப்பாவின் கிளவுசுடன் நேற்றைய போட்டியில் கீப்பிங் செய்து இருக்கிறார்.அடிலெய்ட்ல் நடந்து வரும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. எப்போதும் போல இந்த வருடமும் ஆஸ்திரேலியா இங்கிலாந்து மோதும் ஆஷஸ் தொடர் ஆரம்பத்திலேயே வைரல் ஆக தொடங்கி இருக்கிறது. பல்வேறு வைரல் பிரச்சனைகளுக்கு இடையில் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்து இருக்கிறது. முக்கியமாக இங்கிலாந்து கீப்பருக்கு அந்த கிளவுஸ் கிடைத்த சம்பவமும் வைரல் ஆகி இருக்கிறது. 39 வருடங்களுக்கு பின் எதிர்பார்க்காத நாளில் அவருக்கு இந்த கிளவுஸ் கிடைத்துள்ளது.

இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் 'டேவிட் பெயர்ஸ்டோ' 39 வருடங்களுக்கு முன்பு திடீர் என்று ஒருநாள் மரணம் அடைந்தார். மிகவும் திறமையான விக்கெட் கீப்பரான இவரின் மரணம் இங்கிலாந்து ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் சில ஆண்டுகளுக்கு முன் அவரது மகன் 'ஜானி பெயர்ஸ்டோ' அவரைப்போலவே விக்கெட் கீப்பராக இங்கிலாந்து அணியில் சேர்ந்தார்.

Australian is currently playing Ashes test series against England. England wicket keeper uses his father's keeping gloves after 39 years as the gift.

Recommended