ஜெயலலிதாவுடன் ஒரு பத்திரிகையாளனின் அனுபவங்கள் (அத்தியாயம் 1)- வீடியோ

  • 7 years ago
1991 ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற மக்களவை மற்றும் தமிழக சட்டசபைக்கான தேர்தல் கால கட்டத்தில் முதன்முறையாக ஜெயலலிதாவை நான் பார்த்தேன். அப்போது ''விடிவெள்ளி''என்ற நாளிதழின் நிருபராக இருந்தேன். காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் பத்திரிகை அது. அதன் உரிமையாளரும், ஆசிரியரும் தெள்ளூர் மு தருமராஜன். அவர் தான் என்னை பத்திரிகை உலகுக்கு அறிமுகம் செய்தார். காங்கிரஸ், அஇஅதிமுக கூட்டணியில் இருந்தது.சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் தேர்தல் பிரச்சாரத்தில்தான் அவரை முதன் முறையாக நேரில் கண்டேன். பின்னர் மே 21, 1991 ல் ராஜீவ் காந்தியின் படுகொலை ஜெ வின் தேர்தல் பிரச்சாரத்தை முற்றிலுமாக முடக்கியது. தேர்தல்கள் ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப் பட்டு, அதில் வென்று ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றார். சுதந்திர இந்தியாவின் தமிழ் நாட்டு அரசியலில் அது வரையில் இல்லாத அளவுக்கு முதலமைச்சருக்கும், பொது மக்களுக்குமான இடைவெளி மிக அதிகமாக இருந்த காலகட்டம் அது.

ஜெயலலிதா வின் உயிருக்கு பாதுகாப்பு என்ற பெயரில் பொது மக்களுக்கு எந்த அளவுக்கு இன்னல்களை, இடையூருகளை ஏற்படுத்த முடியுமோ அந்தளவுக்கு இடையூருகள் ஏற்படுத்தப் பட்டன. ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக மட்டுமே ஸ்பெஷல் ஸெக்யூரிட்டி குரூப், Special security Group (SSG) என்ற சிறப்பு பாதுகாப்பு படை ஏற்படுத்தப் பட்டது. இதன் தலைவராக, பிற்காலத்தில் சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டு கொன்ற கே.விஜயகுமார் இருந்தார். விஜயகுமார் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பின்னர் மத்திய அரசால் உருவாக்கப் பட்ட, ஸ்பெஷல் ப்ரொடக்ஷன் குரூப், Special Protection Group (SPG) என்ற பாதுகாப்பு படையில் பணியாற்றியவர். SPG யின் பணி பிரதமர்கள் மற்றும் பிரதமரின் குடும்பத்தவர்களையும், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு படை.



Former CM Jayalalithaa's role analyzed from a journalist's perspective.

Recommended