கல்யாணத்திற்கு வற்புறுத்தினாள்..குழந்தையோடு கொன்று புதைத்தேன்..புதுச்சேரி பூ வியாபாரி- வீடியோ

  • 7 years ago
திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்திய காதலியை குழந்தையோடு கொன்று புதைத்து விட்டதாக பூ வியாபாரி ஒருவர் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். புதுவையை அடுத்த தமிழகப் பகுதியான கிளியனூர் போலீஸ் சரகம் சித்தேரியில் பிறந்து சில மாதங்களே ஆன ஆண் குழந்தை சடலம் மீட்கப்பட்டது. இந்த குழந்தையின் சடலத்தை வைத்து போலீஸ் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. புதுவை வானரப்பேட்டையை சேர்ந்தவர் குணவதி,37. பூ வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்துக்கு தேவையான பூக்கள் வாங்க புதுச்சேரி பெரிய மார்க்கெட்டுக்கு வந்த போது அங்கு பூ வியாபாரம் செய்து வந்த திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. குணவதியை விட பிரபாகரன் 5 வயது குறைவானவர்.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசிவந்தனர். சில சமயம் உறவில் ஈடுபட்டதில் குணவதி கர்ப்பம் அடைந்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரபாகரனை குணவதி வற்புறுத்தினார். ஆனால் பிரபாகர் நழுவி வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குணவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதன்பின்னரே பிரபாகரனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி திருவண்ணாமலையில் இருப்பது குணவதிக்கு தெரியவந்தது.