துலாம் ராசிக்குள் நுழைந்த காதல் நாயகன் செவ்வாய்.. 12 ராசிகளுக்கும் என்ன நடக்கும்?- வீடியோ

  • 7 years ago
செவ்வாய் பகவான் துலாம் ராசிக்குள் பிரவேசித்துள்ளார். இந்த இடப் பெயர்ச்சியானது 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி வரை இருக்கும். இந்த கிரகப் பெயர்ச்சி காரணமாக 12 ராசிகளுக்கும் என்ன பலா பலன்கள் கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
மேஷம், விருச்சிக ராசிகளுக்கு அதிபதி செவ்வாய். மேஷத்தில் செவ்வாய் நிற்க வேகம் அதிகரிக்கும். அதே நேரத்தில் விருச்சிகத்தில் நிற்க வேகம் சற்றே குறைந்திருக்கும். செவ்வாய் தோஷம் திருமண வாழ்க்கையில் தடங்களை ஏற்படுத்துகிறது. வைத்தீஸ்வரன் கோவில், பழனி முருகன் ஆலயங்களுக்கு சென்று வழிபடலாம்.குருவுடன் செவ்வாயும் சுக்கிரனும் சேர அந்த ஜாதகன் நிறைந்த தனங்கள் பெற்று அரசாங்க மரியாதையும் புகழும் அடைவான் என்பார்கள். செவ்வாய் பகவான் குரு உடன் சுக்கிர பகவானின் வீட்டில் அமர்ந்துள்ளார்.

செவ்வாய் கிரகம் ஆண்மைக்கும், பெண்மைக்கும், உணர்ச்சிக்கும், வீரியத்துக்கும் காரண கர்த்தா. ஆண், பெண் உடலில் காதல் தீயை உண்டாக்குபவர். உடல் உறவில் பலத்தையும், வீரியத்தையும், வேகத்தையும் தருபவர். சுக்கிரன் இருவரையும் கவர்ந்து இழுக்கும் காந்த சக்தியாக விளங்குபவர். ஆண்களின் அதிக வீரிய சக்திக்கும் பெண்களின் அதிக கவர்ச்சிக்கும் காரணமானவர்.


As per Indian time on the night of November 30 and December 1, Mars has changed its zodiac sign and entered Libra zodiac. Planet will be in Libra till January 17 2018. Mars is said to be the general

Recommended