ஆற்று வெள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்... பயணிகள் பத்திரமாக மீட்பு - வீடியோ

  • 6 years ago
ஓகி புயலின் தாக்கத்தினால் நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகே ஆற்றுப்பாலத்தில் பேருந்து சிக்கிக்கொண்டது. பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டதால் சேதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் நெல்லை டவுன் - மேலப்பாளையம் இடையிலான தரைப்பாலம் மூழ்கியது.
செங்கோட்டை அரிகராநதி ஆற்றுப்பாலத்தில் வெள்ளப்பெருக்கில் அரசுப்பேருந்து சிக்கியது. குற்றாலம் அருகே தூத்துக்குடி - எர்ணாகுளம் செல்லும் அரசுப்பேருந்து ஆற்றுப்பாலத்தில் வந்தபோது பேருந்து சிக்கிக்கொண்டது. பேருந்தில் இருந்த 40 பயணிகளை கிராம மக்கள் பத்திரமாக மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஊத்துமடம் பகுதியில் 4 கிராமங்கள் நீரில் மூழ்கின. இதனால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

Cyclonic activity battered Tirunelveli district. TNSTC bus being struggle the flood due to the Cyclone Ockhi

Recommended