பாஜகவிற்கு சவாலாக இருக்கும் ஜிக்னேஷ்... மனு தாக்கல் செய்த நாளிலேயே வாரண்ட் பிறப்பிப்பு!- வீடியோ

  • 7 years ago
குஜராத் தேர்தலில் வட்கம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் தலித் உரிமைகளுக்கான போராளி ஜிக்னேஷ் மேவானி மீது வேட்பு மனு தாக்கல் செய்த நாளன்றே ஜாமினில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலித் உரிமைகளுக்காகப் போராடி வரும் சமூக செயற்பாட்டாளர் ஜிக்னேஷ் மேவானி, குஜராத் சட்டசபை தேர்தலில் பனஸ்கந்ததா மாவட்டம் வட்கம் தொகுதியில் தனித்து களமிறங்கிறார். இதற்கான வேட்பு மனு தாக்கலை அவர் நேற்று செய்துள்ளார்.

வேட்பு மனு தாக்கலுக்கான பணிகளில் இருந்ததால் ஜிக்னேஷ் வழக்கு ஒன்றின் விசாரணக்கு நேரில் ஆஜராகவில்லை. கடந்த ஜனவரி மாதத்தில் டெல்லியில் இருந்து அஹமதாபாத் வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து ஜிக்னேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 40 பேர் இந்த ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மாநில அரசின் சார்பில் ஆடம்பரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குஜராத் மாநாட்டை கண்டித்து இந்த ரயில் மறியல் நடைபெற்றது

A non-bailable warrant has been issued against Dalit rights activist Jignesh Mevani, who is contesting in the upcoming Gujarat assembly elections from Vadgam for not apppearin in a case hearing.

Recommended